ஏடிஎம்மின் காவலாளி… பணம் எடுக்க வந்தவரின் கேள்விக்கு பூனை கொடுக்கும் ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ!!!

Author: Babu Lakshmanan
23 December 2023, 5:00 pm

தனியார் வங்கியில் ஏடிஎம் மிஷின் மீது அமர்ந்து காவல் காக்கும் பூனை, வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கொடுக்கும் ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.

தர்மபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அமைக்கப்பட்டு இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தின் மீது ஒரு பூனை காவல் காப்பது போன்று அமர்ந்து கொண்டு பார்ப்போரை கவர்ந்து வருகிறது.

மார்கழி மாத குளிரில் வெளியில் நடமாட முடியாமல் அறைக்குள் இருக்கும் பூனை வங்கி வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அச்சு அசலாக பதில் பேசுவது போல கத்துவது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இதனை ஒரு வாடிக்கையாளர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

https://player.vimeo.com/video/897396614?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

பூனையிடம் வாடிக்கையாளர் இங்கு நீதான் காவல் இருக்காயா எனவும், சாப்டியா எனவும் பல கேள்விகளுக்கு பதில் கூறுவது போல மியாவ் என கத்துவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!