மேடம் இது நடிப்பு மேடம்.. பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்ற லாரன்ஸ் ஞாபகம் இருக்கா? அவரு இப்ப உயிரோட இல்லையா? வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2023, 10:04 pm

மேடம் இது நடிப்பு மேடம்.. பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்ற லாரன்ஸ் ஞாபகம் இருக்கா? அவரு இப்ப உயிரோட இல்லையா? வைரலாகும் வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மிகவும் பாப்புலர் ஆனது. அதற்கு காரணம் லட்சுமி ராமகிருலுஷ்ணன்.

குடும்ப சண்டை, காதல் தோல்வி, விவகாரத்து, கள்ளக்காதல், அடிதடி என பல்வேறு பிரச்சனைகளோடு வருவபவர்களை அமர வைத்து தீர்வு காணும் வகையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பு எதிர்ப்பு தொடங்கியதால் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சி பலர் பிரபலமாகி உள்ளனர்.

அதில் ஒருவர்தான் லாரன்ஸ். இந்த நிகழ்ச்சியில் இது ஆக்ஷன் மேடம், இது நடிப்பு மேடம் என்று பேசிய வார்த்தைதான் இன்றளவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட்.

அப்படிப்பட்ட லாரன்ஸை பலரும் பலவித மீம்ஸ்களில் பயன்படுத்தினர். ஆனால் அந்த லாரன்ஸ் யார், தற்போது எப்படி உள்ளார், எங்கு உள்ளார் என்பது குறித்த ஒரு வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

அதில் கோயம்பேட்டில் காய்கறி மண்டியில் வேலை செய்த அவரின் பெயர் உண்மையாகவே லாரன்ஸ் இல்லை. விருமாண்டியாம்.

திருமணத்திற்கு பிறகு பெயரை லாரன்ஸ் என மாற்றியுள்ளார். சொல்வதெல்லாம் உண்டை நிக்ழ்ச்சிக்கு பிறகு சில நாட்கள் கோயம்பேட்டில் வேலை செய்து வதந் இவர், கொரோனாவுக்கு பிறகு பார்க்கவே இல்லை என அவருடன் பணியாற்றியவர்கள் கூறியுள்ளனர்.

அவர் எங்கு இருக்கிறார்? உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை என அவர்கள் கூறும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?