அடப்பாவிகளா.. டைட்டில் வின்னரை இப்படி தான் செலக்ட் பண்றீங்களா.. அதுக்குள்ளயே ரிசல்ட் லீக் ஆகிடிச்சா..!

Author: Vignesh
24 December 2023, 1:45 pm

பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை.

காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். தற்போது, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகிறார்கள். ஃப்ரீஸ் டாக்ஸ் நடைபெற்றது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று பாசத்தை வெளிக்காட்டினர்.

bigg boss 7 tamil-updatenews360

கடந்த சீசன்களை விட இந்த சீசன் வித்தியாசமாகும் டைட்டில் வின்னரை குறித்து 80 நாட்களை கடந்தும் யூகிக்க முடியாமல் இருப்பதாகவும், மக்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த சீசனில் யார் டைட்டில் வாங்குவார் என்பதற்கு பலரும் அர்ச்சனாவை குறிப்பிட்டு வருகிறார்கள். இருந்தாலும், யார் டைட்டில் வின்னர் என்பதை கடந்த ஆறு சீசன்களை வைத்து ஒரு கணிப்பு வெளியாகி உள்ளது. அதாவது வின்னர்களின் முதல் எழுத்தினை வைத்து தான் இந்த கணிப்பை நெட்டிசன்கள் யூகித்துள்ளனர்.

bigg boss

அதாவது,

  • முதல் சீசன் – ஆரவ் – A
  • இரண்டம் சீசன் – ரித்விகா – R
  • மூன்றாம் சீசன் – முகேன் – M
  • நான்காம் சீசன் – ஆரி அர்ஜுனன் – A
  • ஐந்தாவது சீசன் – ராஜு – R
  • ஆறாவது சீசன் -அசிம் – A

இதை வைத்து பார்த்தால் A R M A R A என்னும் எழுத்துகளின் வரிசையில் தான் போட்டியாளர்களின் போட்டியாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். அப்படி என்றால் இந்த சீசனில் முதல் எழுத்து R ரில் துவங்கும் நபர் தான் வெற்றியாளராக இருக்க முடியும் என ஒரு கணிப்பு வெளியாகி உள்ளது.

bigg boss

ஆனால் ஒரு சிலரோ A என்ற எழுத்து தொடங்கும் போட்டியாளர் அர்ச்சனா தான் இருக்கிறார். அதனால், அர்ச்சனா தான் இந்த சீசன் செவனின் டைட்டில் வின்னர் ஆக முடியும் என்று கூறி வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?