ஈரமான சாலையில் சறுக்கிய இருசக்கர வாகனம்.. நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி..ஷாக் சிசிடிவி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2023, 4:55 pm

ஈரமான சாலையில் சறுக்கிய இருசக்கர வாகனம்.. நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி..ஷாக் சிசிடிவி!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று அதிகாலை லேசான சாரலுடன் மழை பெய்தது இதனால் சாலை பரவலாக தண்ணீருடன் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஈச்சர் வேன் ஒன்று பேருந்து நிலையம் வருவதற்காக திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போது அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞர் பயணித்துள்ளார். அப்போது வேன் திடீரென திரும்புவதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர் பதட்டத்தில் இருசக்கர வாகனத்தின் பிரேக்கை பிடிக்கவே சாலையில் இருந்த தண்ணீரில் வழுக்கி விழுந்து அதிவேகமாக சென்று வேனின் நடுப்பகுதியில் மோதினார்.

இதைக்கண்ட அருகே உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அந்த இளைஞனை மீட்டனர்.

https://vimeo.com/897715893?share=copy

இதில் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் தப்பியுள்ளார். இதன் சிசிடி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!