கனகசபையில் ஏற தீட்சிதர்கள் எதிர்ப்பு… சிதம்பரம் கோவிலில் மீண்டும் சர்ச்சை : கொதித்த இந்து முன்னணி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 டிசம்பர் 2023, 5:35 மணி
Chidambaram
Quick Share

கனகசபையில் ஏற தீட்சிதர்கள் எதிர்ப்பு… சிதம்பரம் கோவிலில் மீண்டும் சர்ச்சை : கொதித்த இந்து முன்னணி!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபையில் ஆண்டாண்டு காலமாகப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தீட்சிதர்கள் அறிவித்தனர். இதனை அனைத்து தரப்பிலும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கொரோனா காலம் முடிந்த பிறகும் அவர்கள் தீட்சிதர்களைத் தவிர மற்ற யாருக்கும் அனுமதி இல்லை என அறிவித்தனர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு கோவிலில் கனகசபையில் ஏறி வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது என அரசாணை வெளியிட்டது.

அரசாணைப்படி பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பேச்சு வார்த்தைக்கு வந்தனர். ஆனால் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்க பொது தீட்சிதர்கள் மறுத்து விட்டதால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என பொது தீட்சிதர்கள் விளம்பர பலகை வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பிரச்சினை செய்ய வேண்டும் என்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்துள்ளது. அதிகமான கூட்டம் இருக்கும் காலங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தள்ளுமுள்ளு ஏற்படாமல் தவிர்க்கவும் கூட்ட நேரத்தில் மட்டும் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய ஆலயத்தை நிர்வகிக்கும் தீட்சிதர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் ஆலயத்துக்கு சம்மந்தமில்லாத இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு வேண்டுமென மனு கொடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. இது முழுக்க முழுக்க அறநிலையத்துறைக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் மீது உள்ள வன்மமே காரணம். ஆகவே சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதனை நிர்வகிக்கும் தீட்சிதர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு காவல்துறையும், அரசும் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 344

    0

    0