3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்… 3 மாதத்திற்குள் சட்டமாக இருப்பதாக தகவல்…!!
Author: Babu Lakshmanan25 December 2023, 8:25 pm
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மக்களவையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், 143 எதிர்கட்சிகள் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பின்னர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, இந்த 3 மசோதாக்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
பின்னர், 3 மசோதாக்களும் குடியரசு தலைவரின் ஓப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்குகுடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இந்த 3 மசோதாக்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் சட்டமாகிறது.