40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும்… புயலை எதிர்கொள்ள திட்டமிடல் இல்லாததால் மக்கள் சிரமம் ; அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
Author: Babu Lakshmanan26 December 2023, 12:54 pm
அவசரகதியில் பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்த துடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை- வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று தொடங்கியது. பொதுக்குழு நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை முதலே மண்டபத்தின் முன்பு அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் குவிந்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதேவேளையில், அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட பிறகு அதிமுக பொதுக்குழு செயற்குழு கூடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூடியது. இதில், பங்கேற்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் தள்ளு, முள்ளுவுக்கு பிறகு, அரங்கத்திற்கு அவர் வருகை புரிந்தார்.
அப்போது, அவரை ஆரத்தி எடுத்து கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், மேடையில் இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் என மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 22 தீர்மானங்கள்
- அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கட்சியை சிறப்பாக வழிநடத்தி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்கள்.
- மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாடு வெற்றி பெற்றதற்கு நன்றியும், பாராட்டும்.
- மிக்ஜாம் புயலை முன்பே எதிர்கொள்ள திட்டமிடாமல் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யாமல் இருக்கும் திமுக அரசுக்கு கண்டனங்கள்.
- (1) சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது ஒளிபரப்பு செய்யாமல் இருட்டடிப்பு செய்வதற்கு கண்டனம். (2) எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை கடைபிடிக்காத பேரவை தலைவருக்கு கண்டனம்.
- கட்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக அரசுக்கு வலியுறுத்தல்.
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம்.
- சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கும் – திமுகவின் மக்கள் விரோத போக்கிற்கும் கண்டனம்.
- ஊழல் ஆட்சி நடத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.
- 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய திமுக அரசுக்கு வலியுறுத்தல்.
- நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
11 ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
- வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்.
- தமிழ்நாட்டில் நெசவுத்தொழிலை பாதுகாக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.
- பட்டியலின மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம்.
- அவசரகதியில் பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்த துடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.
16.(1) தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழிகளாக அறிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தல். (2) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை கொண்டு வர வலியுறுத்தல்.
17 சமூக நீதிக்கு எதிராக செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம்.
- காவிரி நதிநீர் பிரச்சனையில் திமுகவின் சந்தர்ப்பவாத துரோகத்திற்கு கண்டனம்.
- நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி அளித்த திமுக அரசுக்கு கண்டனம். (2) தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டனம்.
- முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசுக்கு கண்டனம்.
- குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைந்திட இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல்.
- நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் கட்சி பணியாற்றிட வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.