கூட்டணி தர்மத்துக்காக பாஜக செய்வதை பொறுத்துக்கொண்டோம்.. மாற்றான்தாய் மனப்பான்மையோடு தான் மத்திய அரசு உள்ளது : இபிஎஸ் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2023, 2:52 pm

கூட்டணி தர்மத்துக்காக பாஜக செய்வதை பொறுத்துக்கொண்டோம்.. மாற்றான்தாய் மனப்பான்மையோடு தான் மத்திய அரசு உள்ளது : இபிஎஸ் பேச்சு!!

சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளது. போராடக்கூடிய விவசாயிகள் மீது கூட குண்டர் சட்டம் பதிவு செய்யப்படுகிறது. திமுக அரசுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது. எப்போது அதிமுக ஆட்சிக்கு வரும் என மக்கள் கேட்கின்றனர்.

மதுரை மாநகரமே குலுங்கும் அளவுக்கு அதிமுக மாநாடு நடைபெற்றது. மதுரையை அதிர வைத்த அதிமுக மாநாடு. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 15 லட்சம் பேர்கலந்துக்கொண்ட மதுரை மாநாட்டை அதிமுக நடத்தியது. எதிரிகள் அஞ்சும் அளவில் மதுரை மாநாட்டை நடத்திய அதிமுக, மதுரை மாநாட்டை போல் இனி எந்த கட்சியும் நடத்த முடியாது என தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை கடந்த செப்டம்பர் மாதமே தெரியப்படுத்திவிட்டோம். கூட்டணி தர்மத்துக்காக மக்கள் விரோத செயல்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது என கூறினார்.

மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் மத்திய அரசுகள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் மாநிலத்தை யார் ஆட்சி செய்தாலும் மத்திய அரசுகள் எப்போதும் தேவையான நிதியை வழங்கியதே கிடையாது எனவும் குற்றம் சாட்டினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்