ஆசை ஆசையாய் சென்ற SJ சூர்யா.. அந்த வார்த்தை சொல்லி துரத்திவிட்ட காதலி.. ஃப்ளாஷ்பேக் ஸ்டோரி..!
Author: Vignesh26 December 2023, 3:31 pm
வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு , டான் , வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும். தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களுக்கு பிரபலமானவராக பார்க்கப்படுகிறார். கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிப்பு அரக்கனாக திரையில் மிரட்டிக் கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில், 55 வயதாகும் தனக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அதாவது, SJ சூர்யாவிற்கு காதல் தோல்வி இருந்துள்ளது. தன்னுடைய காதல் அன்பே ஆருயிரே திரைப்படத்தைப் போன்றே தான் இருக்கும். இருவரும் உண்மையாக காதலித்தோம். ஒரு முறை என் காதலி இரவு விருந்து ஏற்பாடு செய்து என்னை அழைத்திருந்தார். அந்த சமயத்தில், ஒரு தயாரிப்பாளர் படத்தைப் பற்றி பேச என்னை உடனே வரச் சொன்னார். நான் அங்கு சென்று விட்டேன்.
அந்த மீட்டிங் 12 மணி வரை நடந்தது. அதை முடித்துவிட்டு நான் அவசர அவசரமாக ஆசையோடு என் காதலியை சந்திக்க அவருடைய வீட்டிற்கு சென்றேன். அப்போது, அவர் இது ஒன்றும் சத்திரம் இல்லை நினைத்த நேரத்திற்கு வருவதற்கு என முகத்தில் அடித்தார் போல் கூறிவிட்டு, கதவை படார் என்று சாத்திக் கொண்டார். அதன் பிறகு என்னிடம் அவர் பேசவே இல்லை. அது எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது. அந்த காதல் முறிந்து விட்டது. அதன் பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. அப்போது, மூடிய என் இதயம் இப்போது வரை திறக்கவே இல்லை என்று தனது காதல் தோல்வி குறித்து எஸ் ஜே சூர்யா உருக்கத்துடன் பகிர்ந்து உள்ளார்.