தனக்கு மட்டும் இல்ல… மனைவியின் பிறந்த நாளையும் பிரம்மாண்டமா கொண்டாடிய நெப்போலியன்!
Author: Rajesh26 December 2023, 3:38 pm
நெப்போலியன் 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஆறடிக்கும் மேல் உயரம், கம்பீரமான ராஜநடை, முறுக்கு மீசை என பக்கா கிராமத்து மெட்டீரியலாக திரையுலகில் அறிமுகமான நெப்போலியன், போலீஸ் கேரக்டர்களுக்கும் அம்சமாக பொருந்திப் போனார்.

நெப்போலியன் ஹீரோ, வில்லன் கெஸ்ட் ரோல் என வலம் வந்த ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்திருந்தார். நெப்போலியனுக்கு கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்கள் தரமான கம்பேக் கொடுத்தன. அதேபோல், நெப்போலியன் கமலுடன் விருமாண்டி, தசாவதாரம் படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இறுதியாக கார்த்தியுடன் நடித்த சுல்தான் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனிடையே சினிமா, அரசியல் என பயணித்துக் கொண்டிருந்த நெப்போலியன், ‘ஜீவன் டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் ஐடி நிறுவனமும் நடத்தி வருகிறார். நெப்போலியனின் ஐடி நிறுவனம் சென்னை, அமெரிக்கா என இரு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. நெப்போலியன் தனது மகன் தனுஷின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சென்று செட்டில் ஆனார்.

பல வருடங்களாகவே அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனின் வீட்டிற்கு யூடியூப் பிரபலம் இர்பான் அவரின் வீட்டிற்கு சென்று வீடியோ வெளியிட்டதில் அனைவருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியனுக்கு நடிகை குஷ்பு, மீனா உள்ளிட்டோர் அமெரிக்கா சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். அவர்களுடன் நெப்போலியனின் வெளிநாட்டு நண்பர்கள் கூட கலந்துக்கொண்டனர்.
நெப்போலியன் தன்னுடைய பிறந்தநாள் மட்டும் அல்லாது தன்னுடைய மனையின் 51ஆவது பிறந்தநாளையும் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அன்பிற்குரிய நண்பர்களே,டிசம்பர் 24, 2023 அன்று எனது மனைவியின் 51வது பிறந்தநாளை எனது மூத்த சகோதரன் மற்றும் என் மைத்துனியுடன் எங்கள் குடும்ப நண்பர் வழக்கறிஞர் ஆசிரின் இல்லத்தில் பாம் பீச் USA இல் கொண்டாடினோம் என கூறி பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். இந்த வீடியோ இணையாவசிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதோ அந்த வீடியோ: