பேட்டிங் தெரியாமல் திணறிய அமைச்சர் ரோஜா.. கற்றுக் கொடுத்த முதலமைச்சர் ஜெகன்மோகன் : வைரல் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan26 December 2023, 4:59 pm
பேட்டிங் தெரியாமல் திணறிய அமைச்சர் ரோஜா.. கற்றுக் கொடுத்த முதலமைச்சர் ஜெகன்மோகன் : வைரல் வீடியோ!!
ஆந்திர மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் விளையாடத் தெரியாமல் திணறிய நடிகையும் அமைச்சருமான ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேட்டிங் செய்ய கற்றுக் கொடுத்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
விளையாடு ஆந்திரா என்ற பெயரில் அங்கே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு பிப். மாதம் வரை இந்தப் போட்டிகள் நடக்கிறது.
இதில் முதல் போட்டியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று குண்டூரில் தொடங்கி வைத்தார். அப்போது பேட்டிங் செய்ய சென்ற விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா, கிரிக்கெட் பேட்டை எப்படிப் பிடிப்பது என்று தெரியாமல் தடுமாறினார்.
அப்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சர் ரோஜாவுக்கு பேட்டை எப்படிப் பிடிப்பது என்று கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு பேட்டிங் செய்த ரோஜா, பந்தைப் பறக்க விட்டார்.
Minister Roja ki cricket nerpistunna CM jagan. #Coach pic.twitter.com/c3uLZiwERZ
— Hanu (@HanuNews) December 26, 2023
இதை அருகில் இருந்து பார்த்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கைதட்டி உற்சாகப்படுத்தினார். இது தொடர்பா வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.