அஜித் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் …. சூர்யாவிடமே அந்த Quality இல்லை – புகழ்ந்த ஜோதிகா!

Author: Rajesh
26 December 2023, 5:16 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையை திருமணம் செய்வதில் விருப்பமே இல்லையாம். தன் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதாகவும் அது நடக்காததால் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகுமாரே பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

அதன் பின்னர் தன்னுடைய இளைய மகன் கார்த்திக்கு தன் இஷ்டப்படி தன் சாதிக்கார பேனையே திருமணம் செய்துவைத்து நிம்மதி அடைந்தார். இதையெல்லாம் மனதில் வைத்து சரியான நேரம் பார்த்து பழிவாங்க எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஜோதிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

jyothika surya

சரி போனால் போகட்டும் என விட்ட சிவகுமாருக்கு மீண்டும் பெரிய இடி கொடுத்தார் ஜோதிகா. ஆம், சூர்யாவை கூட்டிக்கொண்டு தான் பிறந்த மண்ணான மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இதனால் குடும்பத்தில் பெரிய பிரச்சனை என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு பல கேள்விகளுக்கும் வதந்திகளுக்கு பதில் அளித்த ஜோதிகா, ஆரம்பத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தை குறித்து மனம் திறந்து பேசினார். அதாவது நான் முதலில் நடித்த ஹீரோ சூர்யா தான் ஆனால், முதன் முதலில் வெளியான படம் அஜித்துடன் நடித்த வாலி திரைப்படம் தான். எனவே அஜித் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு தமிழே பேச தெரியாது. அப்போது அஜித் என்னுடன் நன்றாக இந்தி பேசுவார். சொல்லப்போனால் என்னயுடைய பெற்றோரும் அவரின் பெற்றோரும் நண்பர்கள். அந்த அளவிற்கு நாங்க நல்ல பிரண்ட்ஸ் என கூறினார் ஜோதிகா.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 636

    0

    0