வில்லன் பெயரை வைத்த அஜித்… விடாமுயற்சி படத்தில் கதபாத்திரத்தின் பெயர் வெளியானது!!!

Author: Vignesh
26 December 2023, 6:54 pm

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் நடிகர் அஜித் பிறந்தநாள் அன்று வெளியிட்டப்படும் எனவும் அதற்கு தேவையான வேலைகள் படபிடிப்பு முடிந்தவுடன் ஆரம்பிக்கவுள்ளது.

vidamuyarchi

முன்னதாக, அஜர்பைஜான் நாட்டில் தற்போது, தட்பவெப்ப நிலை மிகவும் மோசமாக உள்ளது. இரவு நேரங்களில் கடுமையான குளிர் ஏற்பட்டு வருகிறது. இதனால் அஜித் குமார் படப்பிடிப்பை பகல் நேரங்களில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என இயக்குனர் மகிழ்திருமேனியிடம் சொல்லிவிட்டாராம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், இப்படத்தில் நடிகர் அஜித் குமாரின் பெயர் அர்ஜுன் என்று கூறப்படுகிறது. ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பெயரை இப்படத்தில் வரும் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு மகிழ் திருமேனி வைத்துள்ளார் என ரசிகர்கள் இந்த விஷயத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!