மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு… விருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை அறிவிப்பு : ஷாக்கில் மத்திய அமைச்சர்!!
Author: Udayachandran RadhaKrishnan26 December 2023, 8:58 pm
மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு… விருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை எதிர்ப்பு : ஷாக்கில் மத்திய அமைச்சர்!!
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக கூறப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக நாட்டின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் அவரை கைது செய்யக்கோரி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார். எனினும், மல்யுத்த சம்மேளனத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்செய் சிங் வெற்றி பெற்று தலைவராக தேர்வு ஆகினார். இது மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதனால் அதிர்ச்சியடைந்தத சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய் பெறுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பயங்கர எதிர்ப்பை தொடர்ந்து சஞ்செய் சிங் தேர்வை ரத்து செய்தது. இந்த நிலையில், மத்திய அரசின் தயான்சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘மத்திய அரசின் தயான்சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை நான் திரும்ப அளிக்க முடிவெடுத்திருக்கிறேன்” என்றார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீது இன்னும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதால் இப்படி அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.