வணக்கம் சென்னை.. கிரிக்கெட் அணியின் உரிமையாளரான சூர்யா.. தயாரிப்பை தாண்டி இந்த பிசினஸும் ஸ்டார்ட்..!

Author: Vignesh
27 December 2023, 1:20 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதனிடையே சூர்யா திடீரென தனது பெற்றோர்களை தனியாக தவிக்கவிட்டு மனைவி, பிள்ளைகளோடு மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இந்த பிரச்சனை ஜோதிகாவால் தான் வந்தது என்றும், ஜோதிகா குடும்பத்தையே பிரித்து சுக்குநூறாக்கி தனிக்குடித்தனம் சென்றுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

surya -updatenews360

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் தான் வாங்கி உள்ளார்களாம். அதில், சென்னை அணியை நடிகர் சூர்யா தான் வாங்கி உள்ளாராம். இதனை அவரே தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்த வகையில், மும்பை அணியை அமிதாப்பச்சன் வாங்கிய நிலையில், பெங்களூர் அணியை பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய்குமாரும், ஹைதராபாத் அணியை தெலுங்கு நடிகரான ராம்சரனும் வாங்கி இருக்கின்றனர்.

முன்னதாக, தியா தேவ் என குழந்தைகளின் பெயரில் 2டி நிறுவனத்தை ஆரம்பித்து சூர்யா மற்றும் ஜோதிகா நடத்தி வருகின்றனர். கல்விக்காக அகரம் பவுண்டேஸன் நடத்திவரும் சூர்யா தற்போது, விளையாட்டிலும், தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாட வந்த சூர்யா தற்போது ஸ்ட்ரீட் கிரிக்கெட் பிரீமியர் லீக் டி20 போட்டி விளையாட்டில் சென்னை அணியின் உரிமையாளராக மாறியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 381

    0

    0