ஆர்எஸ் பாரதி என்ன பெரிய விஞ்ஞானியா..? ஓபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார்… அடித்து சொல்லும் இபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
27 December 2023, 4:52 pm

கோவை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சிறைக்கு செல்வார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்த போது கூறியதாவது :- டிசம்பர் 3,4 ல் மழை பெய்யும் முன்பே வானிலை மையம் அதி கனமழை எச்சரிக்கை விடுத்தது. அரசுக்கும் தெரியும். ஆனால் அரசு முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பருவ மழை முன்பே முன்னேச்சரிக்க எடுக்கவில்லை. தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தாழ்வான பகுதி மக்களை முன்கூட்டியே முகாம்களில் சேர்த்திருக்க வேண்டும். தூத்துக்குடியிலும் பாலங்கள் இடிந்து பாதிப்பு அதிகம். காயல்பட்டினத்திலும் உப்பளங்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதிகாரிகள் மக்களை சென்று பார்க்கவே இல்லை. ஓடை ஒன்று அருகே நான் சென்று பார்வை இட்டேன். மக்கள் உணவு கூட கிடைக்கவில்லை என கூறினர். வக்கீல் ஓடை எங்கள் ஆட்சியிலேயே 80% பணிகள் முடிந்து இருந்தது. இருப்பினும் திமுக அரசு செய்யாததால் மக்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எங்கள் ஆட்சியின் போது கஜா புயல் அடித்தது. ஆனால் இப்போது பெரிய காற்று இல்லை. வர்தா புயலின் போதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 6 லட்சம் மரங்கள் விழுந்தன. 2 லட்சம் மரங்களை குப்பைகளாக அகற்றினோம். ஆனால் இப்போது போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு உரிய அத்யாவசிய பொருள்கள் கொடுத்தோம்.

வர்தா, கஜாவால் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது எல்லாம் திமுக அதான் கூட்டணிகள் ஒன்றும் கூறவில்லை. மக்களுக்காக தான் ஆட்சி. திமுக கூட்டணியில் இருப்பவர்கள் இப்போது மட்டும் குரல் கொடுக்கிறார்கள். மக்களுக்காக இல்லாமல் தேர்தலுக்காக கொடுக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் பொறுப்பு உள்ளது.

RS பாரதி விஞ்ஞானியா…? அவருக்காகவா கட்சி நடத்துகிறோம். பாஜக உடன் கூட்டணி இல்லை என்றவுடன் திமுக புலம்புகிறார்கள்

மிசா வில் சிறைக்கு சென்றதை எல்லாம் கண்காட்ச்சியில் வைத்தீர்கள்… ஆணாலும் காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளார்கள். OPS விரைவில் சிறைக்கு செல்ல உள்ளார். ஒரு வழக்கில் அல்ல… பல வழக்குகளில் சிறைக்கு செல்ல உள்ளார், எனக் கூறினார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!