‘வணக்கம் சென்னை’… டி10 கிரிக்கெட் அணியை வாங்கிய நடிகர் சூர்யா.. தந்தைக்கும், மகனுக்கும் இடையே புதிய மோதல்..!!
Author: Babu Lakshmanan27 December 2023, 7:15 pm
இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் டி10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.
கிரிக்கெட்டின் மீது ரசிகர்களிடையே ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டும் வகையில் குறைந்த ஓவர் கொண்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐரோப்பா நாடுகளில் இதுபோன்ற கிரிக்கெட் தொடர்கள் அதிகம் நடத்தப்பட்டு வருகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவிலும் டி10 கிரிக்கெட் தொடர்களை நடத்தி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், ISPL எனும் பெயரில் நடத்தப்படவிருக்கம் டி10 கிரிக்கெட் தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் 6 அணிகள் பங்கேற்கின்றன.
ஐபிஎல்லுக்கு முன்னதாக மார்ச் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடத்தப்படும் இந்த கிரிக்கெட் தொடருக்கான அணிகளை திரையுலக பிரபலங்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில், சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். அதேபோல, மும்பை அணியை நடிகர் அமிதாப் பச்சனும், ஸ்ரீநகர் அணியை நடிகர் அக்ஷய் குமாரும் வாங்கியுள்ளனர். இதன்மூலம், தந்தை, மகன் இடையே புதிய மோதல் உருவாகியுள்ளது.
பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கி உள்ளனர். கொல்கத்தாஅணியின் உரிமையாளர் விவரம் மட்டும் வெளியாகவிலை.
இதனிடையே, சென்னை அணியை வாங்கியது குறித்த தகவலை நடிகர் சூர்யாவே தனது X தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். அதாவது, ”வணக்கம் சென்னை.. ஐஎஸ்பிஎல் டி10 தொடரில் சென்னை அணியின் உரிமையை பெற்றதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்கள் சிறந்து விளங்கும் ஒரு அணியை சேர்ந்து உருவாக்குவோம்,” என்றும் தெரிவித்துள்ளார்.