டிஜிபி ஆபிசுக்கு வந்த இ-மெயில்… சென்னையில் 30 இடங்களுக்கு குறி… உச்சகட்ட அலர்ட்டில் தலைநகர்…!!

Author: Babu Lakshmanan
27 December 2023, 8:37 pm

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதனை திறந்து பார்த்த காவலர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, சென்னையின் முக்கிய 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக மிரட்டல் விடுத்திருந்தனர்.

அதாவது, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இதையடுத்து, அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மிரட்டல் விடுத்த நபர் யார் என்றும்..? இது உண்மையா.., இல்லையா..? என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தலைநகரை பெரும் பரபரப்பிற்குள்ளாக்கியுள்ளது.

  • anthanan on vijay fadwa statement by muslim organization விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்