அப்பா அப்பா எழுந்து வாங்கப்பா… விஜயகாந்த் உடலை பார்த்ததும் கதறி துடித்த மகன்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2023, 4:02 pm

அப்பா அப்பா எழுந்து வாங்கப்பா… விஜயகாந்த் உடலை பார்த்ததும் கதறி துடித்த மகன்கள்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ இன்று காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குகட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 3 மணிநேரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வழக்கமாக விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வந்தால் அவருடைய பாடல்கள் ஒலிக்கும். ஆனால் இன்று ஆம்புலன்ஸில் விஜயகாந்தின் உடல் வந்த போது அழுகுரல்கள் கேட்டன. இதையடுத்து அங்கு விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்ட போது ஐஸ் பெட்டியை தூக்கி விஜயகாந்தின் தலைக்கு மஞ்சள் நிறத்தில் தலையணை வைக்கப்பட்டது. அப்போது தந்தையின் உடலை கண்டு சண்முக பாண்டியனும் விஜய பிரபாகரனும் கதறி அழுதனர். அவர்கள் இருவரும் தாய் பிரேமலதாவை பார்த்ததும் மேலும் அழத் தொடங்கினர். உடனே பிரேமலதா தனது மகன்களை கட்டி அணைத்தபடியே கதறி அழுதார். அவர்களும் அப்பா அப்பா எழுந்து வாங்கப்பா என அழுதனர்.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 489

    0

    0