10ம் வகுப்பு மாணவனுடன் நெருக்கம்… கட்டிப்பிடித்து போட்டோசூட்.. இறுதியில் பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..!!
Author: Babu Lakshmanan30 December 2023, 10:53 am
கர்நாடகாவில் பள்ளி மாணவனுடன் நெருக்கம் காட்டி போட்டோசூட் நடத்திய ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முருகமல்லா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியை புஷ்பலதா, அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனோடு நெருக்கம் காட்டி போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
ஆசிரியையும், மாணவனும் முத்தமிட்டுக் கொள்வது, ஆசிரியையை மாணவன் தூக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்தப் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவனின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தலைமை ஆசிரியை புஷ்பலதாவை சஸ்பெண்ட் செய்து சிக்காபல்லாபூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.