நெருங்கி வரும் தைப் பொங்கல்.. முதல் ஜல்லிக்கட்டு போட்டி எங்கு நடக்குது தெரியுமா? அரசாணை வெளியீடு!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2023, 4:26 pm

நெருங்கி வரும் தைப் பொங்கல்.. முதல் ஜல்லிக்கட்டு போட்டி எங்கு நடக்குது தெரியுமா? அரசாணை வெளியீடு!

நெருங்கி வரும் தைப் பொங்கல்.. முதல் ஜல்லிக்கட்டு போட்டி எங்கு நடக்குது தெரியுமா? அரசாணை வெளியீடு!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போதும் தைப் பொங்களை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்,. ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம்.

இந்த முறையும் அங்கு நடைபெற உள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சூடு பிடித்துள்ளன

ஆனால் ஒரு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தாமதமானது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தும் பொருட்டு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாடிவாசல், பேரிகார்டு அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற 6-ம் தேதி ஜல்லிக்கட்டு நடடத்த விழா குழுவினர் அனுமதி கோரியிருந்தனர்.

இதன்படி மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்த நிலையில் வரும் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணையில் வெளியிட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 297

    0

    0