டி.ஆருக்கு என்னாச்சு? நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது மயக்கமடைந்த டி.ராஜேந்தர்.. பதட்டமடைந்த ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2023, 5:15 pm

டி.ஆருக்கு என்னாச்சு? நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது மயக்கமடைந்த டி.ராஜேந்தர்.. பதட்டமடைந்த ரசிகர்கள்!!

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க இன்று தூத்துக்குடிக்கு திரை பட இயக்குனர் டி ராஜேந்தர் வருகை தந்தார்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் அடைந்தார் டி ராஜேந்தர்.

இதையடுத்து பதட்டமான அவரது ரசிகர்கள் ராஜேந்திரன் அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை மயக்கத்தில் இருந்து மீட்டனர்.

பின்னர் பத்திரமாக காரில் அழைத்துச் சென்றனர் இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • actor rk said that he gave one crore advance to vadivelu வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…