கிணற்றுக்குள் நடந்த சண்டை… 7 அடி நீள நாகப் பாம்பை சீண்டிய மர்மவிலங்கு : ஷாக் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan30 December 2023, 9:19 pm
கிணற்றுக்குள் நடந்த சண்டை… நல்ல பாம்பை சீண்டிய மர்மவிலங்கு : ஷாக் வீடியோ!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் உள்ள பின்பக்க கிணற்றில் 7 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு மற்றும் மர்ம விலங்கு இருப்பதாக பாம்பு பிடி வீர செல்லாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்த பாம்பு பிடி வீரர் செல்லா அங்கு சென்று பார்க்கும் பொழுது கிணற்றில் மரனாய் என்று சொல்லக்கூடிய மர்ம விலங்கும் 7 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு சண்டை போட்டுக் கொண்டதில் நல்ல பாம்பு காயம் அடைந்து சோர்வாக காணப்பட்டது.
இதை பார்த்த செல்லம் உடனடியாக அங்கு இருந்த மர்ம விலங்கை முதற்கட்டமாக கிணற்றிலிருந்து வெளியே எடுத்து விட்டார் பின்னர் சோர்வடைந்து கடந்த நாகப்பாம்பை எடுத்து சிகிச்சை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.