வறுமை வாட்டியது… ஒரு வேலை சாப்பாடுடன் உயிர் வாழ்ந்தேன் – சமந்தா உருக்கம்!

Author: Rajesh
31 December 2023, 10:32 am

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

samantha - updatenews360

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் நான் ஒரு மிடில் க்ளாசில் பிறந்த பெண் தான். எனக்கு படிப்பில் அதிகம் ஆர்வம் இருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தேன். பின்னர் 12ம் வகுப்பு கல்லூரிகளில் படிக்கும்போது என் பெற்றோர்களால் என்னை படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

இதனால் நான் கிடைத்த வேலைகளை செய்து என் குடும்பத்தை கவனித்தேன். திருமண விழாக்களில் வரவேற்பாளர் வேலைக்கு செல்வேன். அதற்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் தருவார்கள். அது பத்தாது. அதனால் ஒரு வேலை சாப்பாடு மட்டும் சாப்பிட்டு விட்டு மீதி நேரம் பட்டினி கிடப்பேன். ஆனால், ஒரு விஷயத்தில் நான் தெளிவான நோக்கத்துடன் இருந்தேன். என் இலட்சியத்தை அடைவதில்.

முதலில் மாடலிங் துறையில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க பின்னர் சினிமாவில் நுழைந்தேன். சம்பந்தமே இல்லாத இந்த துறையில் நடிப்பை கற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக திறமையை வளர்த்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனவே உங்களுக்கு சொல்லிக்கொள்வது இது தான், உங்கள் பாதை என்ன என்பதை நீங்கள் தேர்வு செய்யுங்கள், நீங்கள் எதை வேண்டுமானாலும் கனவு காணுங்கள், அதை நீங்கள் அடைவீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் தோல்வி அடைந்தாலும், விடாமுயற்சியை கைவிட்டுவிடாதீர்கள், நிச்சயம் ஒரு நாள் கனவை எட்டுவீர்கள் என்றார் சமந்தா.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 558

    0

    0