இப்போதைக்கு குடும்பம் தான் முக்கியம்… திடீர் ஓய்வை அறிவித்த வார்னர்… ரசிகர்கள் அதிர்ச்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 10:56 am

இப்போதைக்கு குடும்பம் தான் முக்கியம்… திடீர் ஓய்வை அறிவித்த வார்னர்… ரசிகர்கள் அதிர்ச்சி!!!

நாளை மறுநாள் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் வார்னர் கூறுகையில், 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசித்தேன்.

இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள வேறு சில லீக்குகளில் விளையாட முடியும். மேலும் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் மற்றும் மூன்று மகள்கள் ஐவி, இஸ்லா மற்றும் இண்டி ஆகியோருடன் நேரத்தை செலவிட விரும்புவதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதுதான் டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவை இரண்டு முறை உலக சாம்பியனாக்குவதில் டேவிட் வார்னர் தனது பங்கை ஆற்றியுள்ளார். 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த 2023 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

உலக கோப்பையில் வார்னர் சிறப்பாக செயல்பட்டார். உலக கோப்பையில் டேவிட் வார்னர் 11 போட்டிகளில் 48.63 சராசரியில் 535 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக எம்.சின்னசாமி மைதானத்தில் 163 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோர் ஆகும். இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 881

    0

    0