விசாரணையில் இறங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் : நாளை நீதிமன்றம் வருகை… சிக்கலில் திமுக அமைச்சர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 12:58 pm

விசாரணையில் இறங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் : நாளை நீதிமன்றம் வருகை… சிக்கலில் திமுக அமைச்சர்கள்!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது உள்ளிட்ட வழக்குகளில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போதைய அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி (திமுக), வளர்மதி (அதிமுக) ஆகியோர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 3 மாதங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு வழக்கமான பணி மாறுதலுக்காக சுழற்சி முறையில் மாற்றப்பட்டார்.

இதனையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், எம்பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்தார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் நீதிபதி வெங்கடேஷ் நாளை முதல் விசாரிக்க உள்ளார். இதனால் ஆளும் திமுகவில் மட்டுமல்ல எதிர்க்கட்சியான அதிமுகவிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2 சொத்து குவிப்புகள் வழக்கு போடப்பட்டன. 2006-2011 ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு அண்மையில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பொன்முடி மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது. இந்த விடுதலை தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 441

    0

    0