தளபதி-68 திருட்டு கதையா? வசமா மாட்டிக் கொண்ட வெங்கட் பிரபு.. என்ன மக்கா இப்படி மாட்டிக்கிட்டீயே..!

Author: Vignesh
1 January 2024, 2:55 pm

லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் என மாறிமாறி பட பிடிப்புகள் நடந்து வருகிறது. தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. தற்போது, தளபதி 68 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கும் வெங்கட்ரவுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

Vijay - Updatenews360

இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில், அதை பார்த்து பலரும் எளிமையாக கண்டுபிடித்து விட்டனர். இந்த படம் ஹாலிவுட்டில் வில்ஸ் ஸ்மித் நடித்த ஜெமினி மேன் படத்தின் காப்பியென்று கூறிவருகின்றனர். இந்நிலையில், வழக்கம் போல் இது அந்த படம் இல்லை என்று பட குழு மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Vijay - Updatenews360
  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 489

    0

    0