மீண்டும் மீண்டுமா.. தினேஷ் நல்ல கணவன் கிடையாது.. மோசமாக விமர்சித்த விசித்திரா..!(வீடியோ)

Author: Vignesh
1 January 2024, 3:09 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

kamal

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7

இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான்.

bigg boss 7 tamil-updatenews360

இந்தநிலையில், தினேஷுடன் சண்டை போட்டுவிட்டு அவரைப் பற்றி திட்டிய விசித்ரா கேமரா முன் நின்று கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது இங்கு இவருடன் ஹவுஸ்மென்ட் ஆகவே, இருக்க முடியல இவர் கூட குடித்தனம் எப்படி பண்ணுவாங்க, விட்டுட்டு ஓட வேண்டியது தான் திரும்பி வந்துவிடாதே தாயே என ரட்சிதாவிடம் சொல்வது போல் கேமராவில் கூறியிருக்கிறார். இதுதான் விசித்ராவின் உண்மை முகம் என சொல்லி நெட்டிசன்கள் அவரை தற்போது விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் ஒருவருடைய திருமண வாழ்க்கை குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை. அது அந்த இருவருடைய சொந்த விஷயம் என கமலஹாசன் விசித்ராவுக்கு அட்வைஸ் செய்திருந்தார். அப்போது, அவரிடம் சாரி சார் இனிமே அப்படி பேச மாட்டேன் என்று விசித்ராவும் கூறி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் எபிசோட் முடிந்த கையோடு தினேஷ் கண்டிப்பாக ஒரு நல்ல கணவனாக இருக்கவே முடியாது. நான் பார்த்ததிலேயே தினேஷ் தான் மிகவும் கொடிய விஷம் கொண்ட மனிதர் என தினேஷை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். ஏற்கனவே, தினேஷின் திருமண வாழ்க்கை குறித்து பேசியதால்தான் கமல் எச்சரித்தார். மீண்டும் தற்போது, அந்த விஷயம் குறித்து விசித்திரா பேசி இருப்பது ரசிகர்களுக்கு கோபத்தை வர வைத்துள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…