சக்திவாய்ந்த நிலடுநக்கத்தால் நடுங்கிய ஜப்பான்… சுனாமி எச்சரிக்கை : ஊருக்குள் புகுந்த கடல்நீர்.. அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 3:14 pm

சக்திவாய்ந்த நிலடுநக்கத்தால் நடுங்கிய ஜப்பான்… சுனாமி எச்சரிக்கை ; ஊருக்குள் புகுந்த கடல்நீர்.. அதிர்ச்சி வீடியோ!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷு அருகே சுமார் 15 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஜப்பானின் வட மத்திய பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. 5.5 முதல் 7.4, 7.5 மற்றும் 7.6 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததால் ஜப்பான் மக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பலாம் என மிக அதிக சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது ஜப்பான் வானிலை ஆய்வு மையம். மேற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, இஷிகாவா, நைகட்டா மற்றும் டொயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், இஷிகாவா, நைகட்டா, டொயாமா உள்ளிட்ட கடற்கரையோர நகர மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ல் இந்தோனோஷியா அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவில் சுனாமி தாக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஜப்பானில் அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனாமிசு நகரின் வடகிழக்கில் 42 கிமீ தொலைவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. மேலும், டோக்கியோவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…