தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்கள் முடக்கம் ; அமலாக்கத்துறை அதிரடி
Author: Babu Lakshmanan1 January 2024, 9:05 pm
தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் சுற்றுச்சூழல் பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
தமிழ்நடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியவர் பன்னீர்செல்வம். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக இவர் மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கில் அவருக்கு சொந்தமான ரூ.4.71 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ரூ.3.59 கோடி கணக்கில் வராத பணம், ரூ.1.12 கோடி மதிப்புள்ள 6 அசையா சொத்துக்கள், 3.6 கிலோ தங்க நகைகள், 6.4 கிலோ வெள்ளி உள்ளிட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.