Bulk ஆன தொகையுடன் வந்த பணப்பெட்டி.. அலேக்காக தூக்கிக்கொண்டு வெளியே எடுத்துச்செல்லும் போட்டியாளர்..!

Author: Vignesh
2 January 2024, 11:12 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

kamal

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7 tamil-updatenews360

இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான்.

bigg boss 7 tamil-updatenews360

தற்போது, நடைபெற்று வரும் பிக்பாஸ் 7 இல் உள்ள சில போட்டியாளர்கள் பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறத் திட்டம் போட்டு வைத்து விட்டனர். விசித்ரா, மாயா, மணி ஆகிய நபர்களில் ஒருவர்தான் பணப்பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள் என கூறப்படுகிறது. அதைப்போல், மறுபக்கம் 10 லட்சம் வந்தால் பணப்பெட்டியுடன் வெளியேறிவிடலாம் என தினேஷ் முடிவு செய்துள்ளார். முதலில், ஒரு லட்சம் தொகையுடன் ஆரம்பித்த நிலையில், 5 லட்சம் வரை சென்றுள்ளது. இதற்கு மேல் எத்தனை லட்சம் அதிகரிக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?