கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் புதிய சர்ச்சை.. பராமரிப்பு பணியில் புனே மாநில நிறுவனம் : திமுக அரசுக்கு புதிய தலைவலி!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2024, 1:54 pm

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் புதிய சர்ச்சை.. பராமரிப்பு பணியில் புனே மாநில நிறுவனம் : திமுக அரசுக்கு புதிய தலைவலி!

சென்னை மாநகரை விட்டு செங்கல்பட்டுக்கு முன்னதாக 25 கி.மீ. தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் தற்போது வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது வட சென்னையில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது.

ஒட்டுமொத்தமாக சென்னையில் குடியிருக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நினைக்கவே முடியாத துயரத்துக்கு கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது என்பதுதான் குமுறல்.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, இப்பேருந்து நிலையத்தில் தேவைப்படும் நிலையில் அம்மா உணவகம் அமைக்கப்படும். பயணிகள் வசதிக்காக கூடுதல் பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

ஆனால் கிளாம்பாகத்திலேயே தங்களது சுமைகளுடன் இறங்கும் தென் மாவட்ட மக்கள், துயரமில்லாமல் சென்னையின் பல பகுதிகளுக்கு செல்ல போதுமான பேருந்துகளை குறைந்த கட்டணத்தில் இயக்குவதுதான் சற்றேனும் ஆறுதலாக இருக்கும் என்பதுதான் தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

அதேபோல தனியார் நிறுவனம் வசம், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பை ஒப்படைப்பது நடைமுறையில் பயணிகளுக்கு வசதிகளை தரப் போகிறதா? துயரத்தை தரப் போகிறதா? என்பதும் தெரியலையே என்கிற விவாதமும் எழுந்துள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 530

    0

    0