விமானம் தரையிறங்கும் போது திடீர் தீ விபத்து.. 2024 பிறந்ததும் ஜப்பானுக்கு அடிமேல் அடி.. நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2024, 5:30 pm
விமானம் தரையிறங்கும் போது திடீர் தீ விபத்து.. 2024 பிறந்ததும் ஜப்பானுக்கு அடிமேல் அடி.. நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்!
ஜப்பான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று சற்று நேரத்திற்கு முன்பு டோக்கியோவின் விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்கிறது. ஆனால் இறங்கிய சில நொடிகளில் பயங்கரமாக தீப்பிடித்துள்ளது. தரையிறங்கும்போது மற்ற விமானத்துடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஜேஏஎல் 516 என்ற விமானம் ஹொக்கைடோவில் இருந்து 379 பயணிகளுடன் புறப்பட்டிருக்கிறது. இது டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியுள்ளது. அதாவது இந்த விமானம் தரையிறங்கும் ஓடுபாதையில் அந்நாட்டின் கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று குறுக்கே நிறுத்தப்பட்டிருந்திருக்கிறது. எனவே இதில் மோதி இரண்டு விமானங்களும் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்திருக்கின்றன.
இதில் பயணிகள் விமானத்திலிருந்த 379 பேரும் பத்திரைமாக விமனத்திலிருந்து மீட்கப்பட்டிருந்திருக்கின்றன. ஆனால், கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்திலிருந்த 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.