அண்ணாமலை வருகைக்காக வைக்கப்பட்ட பேனரை கிழித்த பாஜகவினர்… தருமபுரியில் என்ன நடக்குது? பரபரப்பில் நிர்வாகிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2024, 6:35 pm

அண்ணாமலை வருகைக்காக வைக்கப்பட்ட பேனரை கிழித்த பாஜகவினர்… தருமபுரியில் என்ன நடக்குது? பரபரப்பில் நிர்வாகிகள்!

என் மண், என் மக்கள் என்ற யாத்திரியை கடந்த 28.07. 2023. அன்று ராமேஸ்வரத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் என்மண், என்மக்கள், என்ற யாத்திரையை முடித்துவிட்டு வருகின்ற 08.01.2024. அன்று தர்மபுரி மாவட்டம் அரூர் நகருக்கு வருகை தரும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக அக்கட்சி சார்பில் பல்வேறு அணிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் அரூரில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.

இதில் ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருக்கும் பட்டியல் அணியைச் சேர்ந்த பல்வேறு பேனர்களை அதே கட்சியில் இருக்கும் பொறுப்பாளர் ஒருவர் கிழித்துள்ளதாகவும் இது தொடர்பாக அந்த பொறுப்பாளரை காவல் நிலையத்திற்க்கு அழைத்து விசாரித்துள்ளார்கள். இது தொடர்பாக அரூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?