ஓசியில் சரக்கு வேணும்…. டாஸ்மாக் பாரை அடித்து உடைத்த திமுக கவுன்சிலரின் கணவர் கைது ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 2:25 pm

ஓசியில் சரக்கு கேட்டு பணகுடி டாஸ்மாக் பாரை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் பனகுடி புறவழி சாலையில் அரசு டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக்கில் நேற்று மாலை நேரத்தில் குடிப்பதற்காக ராஜ் என்பவர் வந்துள்ளார். இவர் பணகுடி பேரூராட்சி 15வது வார்டு திமுக கவுன்சிலர் ஆஷாவின் கணவர் ஆவார். டாஸ்மாக் ஊழியர்களிடம் மிரட்டும் தோணியில் சென்று ஓசியில் மது பாட்டில் கேட்டு இருக்கிறார்.

அதற்கு ஊழியர்கள் தர மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த ராஜ், ‘கவுன்சிலரான எனக்கு மது கொடுக்க மாட்டாயா..’ ! எங்க ஆட்சியிலே கொடுக்க மாட்டாயா…” எனக் கூறி தகராறில் ஈடுப்பட்டுள்ளார். மேலும், ஓசியில் மது கிடைக்காத நிலையில், டாஸ்மாக் பாரில் உள்ள சேர்களை உடைத்துள்ளார். இதனால், அங்கு ஏற்கனவே குடித்து கொண்டு இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இது குறித்து பார் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!