பெரியார் பல்கலை., துணைவேந்தர் கைது… பின்னணியில் பொன்முடி.. வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 4:49 pm

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் பாஜக சேலம் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- பிரதமர் மோடிக்கு பிரமாண்டமான முறையில் தமிழகத்தில் வரவேற்பு அளித்தார்கள். தமிழகத்தில் எந்தளவிற்கு எழுச்சி உள்ளது என்று பிரதமர் மோடி பார்த்தார்

மேலும், சேலத்தில் தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. மானமுள்ள எந்தத் தமிழனும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார். பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கைது என்பது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தலைகுனிந்து நிற்கும் அளவிற்கு செய்துள்ளனர். குறிப்பாக, துணைவேந்தரை கைது செய்து நான்கு மணி நேரம் காவல்துறை வாகனம் மூலமாக சேலம் முழுவதும் சுற்றினர்.

மாலை 4:40க்கு கைது செய்துவிட்டு, இரவு 9:30 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். நள்ளிரவு மேஜிஸ்திரேட் இல்லத்திற்கு துணைவேந்தர் அழைத்துச் செல்லப்பட்டார். மூன்றரை மணிக்கு மேஜிஸ்டேட் ஜாமின் வழங்கினார்.

தமிழக மக்களுக்கு பாஜக ஆக்கப்பூர்வமான கட்சியாகவும், மக்களை பாதுகாக்கின்ற கட்சியாக திகழ்ந்து வருகிறது. எங்கு அநியாயம் நடந்தாலும் அதைக் கேட்கின்ற கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலமாக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டால், அதில் வரும் லாபம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். இதை வேண்டுமென்றே திரித்து தனியார் நிறுவனம் என்று கூறிவிட்டார்கள். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட நான்கு பேராசிரியர்கள் சேர்ந்து தனியார் நிறுவனத்திடம் இருந்துவரும் பணத்தை பவுண்டேஷன் மூலமாக பெரியார் பல்கலைகத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆற்றல் திறமையை வளர்க்கும் விதமாக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிறுவனங்கள் உள்ளது. இதேபோன்று பணம் நாடு முழுவதும் இருந்து வருகிறது. அதை பல்கலைக்கழகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் எந்த தவறும் இல்லை, நியாயமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இதிலிருந்து லாபத்தை ஒரு சதவீதம் கூட வெளியே எடுக்க முடியாது. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், காவல்துறையினர் தனியார் நிறுவனம் ஆரம்பித்துவிட்டதாக பெரியார் நிறுவனத்தின் சொத்தை கொள்ளையடிப்பதாக பொய்யான குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதற்கு காவல்துறை முகத்தை கீழே குனிய வேண்டும், என்றும் பேசினார்.

குறிப்பாக, இரண்டு நபர்கள் துணைவேந்தர் ஜெகநாதன் நேரில் சந்திக்க செல்கிறார்கள். 10 வினாடிகள் கூட இருக்காது, அதற்குள் எவ்வாறு ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டிருக்க முடியும். மேலும் அவரிடம் பேசிவிட்டு செல்லும்போது இருவரும் சிரிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியவர்கள் கேட்டுக் கொண்டு எவ்வாறு அவரால் சிரிக்க முடியும். எனவே முகாந்திரமே இல்லாமல் வன்கொடுமை வழக்கு போடப்பட்டுள்ளது. இது அமைச்சர் பொன்முடி சொல்லிக்கொடுத்து நடக்கிறது.

பெரியார் பல்கலைக்கழகம் பதிவாளர் இல்லாமல் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பொன்முடி துணைவேந்தரிடம், இவரை தான் பதிவாளராக போட வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அதை துணைவேந்தரை ஏற்றுக் கொள்ளவில்லை..ஒரு நடவடிக்கை மேற்கொண்டு நியாயமான முறையில் பதிவாளரை போட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான கூட்டம் நடைபெற்றபோது பிரச்சினை ஏற்பட்டது. துணைவேந்தரிடம் பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் உடன் இரண்டு பேர் பேசும் வீடியோ ஆதாரங்களை அண்ணாமலை வெளியிட்டார்.

அரசு சொன்ன பதிவாளரை போடவில்லை என்ற காரணத்தால் தனிமனிதன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குபதிவு செய்து, நாயை நடத்துவது போன்று நடத்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டில் அமர்ந்து உள்ளார் என்றும் கூறினார்.

மேலும், உயர்கல்வித்துறை செயலாளர் சிண்டிகேட் நடந்த தகவல்களை வெளியிட்டு உள்ளார். காவல்துறைக்கு எவ்வாறு தகவல் கிடைத்தது என்று கேள்வி எழுப்பினார். பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாநில டிஜிபி, சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது, என்றும் கூறினார்.

பொன்முடி சொன்னால் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம் என்று சொன்னால், இதற்காக காவல்துறை காக்கிசட்டை போடுகிறது என்று கேள்வி எழுப்பினார். சேலம் மாநகர காவல் ஆணையாளர் குறித்து விமர்சனம் செய்தார்.பெரியார் பல்கலைகத்தில் உள்ளே நிறுவனத்தை பேராசிரியர்கள் நான்குபேர்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் பதவி முடிந்தபிறகு என் நிறுவனம் என்று எடுத்துச்சென்றால் அது குற்றம், அப்பொழுது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் சரியானது. குறிப்பாக துணைவேந்தர் விவகாரத்தில் சேலம் மாநகர காவல் துறையினர் திட்டமிட்டு அனைத்தும் செயல்படுத்தி உள்ளது என்றும் விமர்சனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலை கூறுகையில், ஆத்தூரில் இரண்டு விவசாயிகள் நிலத்திற்கு அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து, அமலாக்கத்துறை தான் விளக்கம் அளிக்க வேண்டும், என்றார்.

இலக்கிய அணி பாஜக கிழக்கு மாவட்டச் செயலாளருக்கு அமலாக்கத்துறை குறித்து எதுவும் தெரியவில்லை, ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தால் கூட எழுதியதை படிப்பாரா என்று தெரியவில்லை, இதில் அவருக்கும், இதற்கும் எதுவும் சம்பந்தம் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதை சம்மதமே இல்லாமல் பாஜக கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளருக்கும், அமலாக்கத்துறைக்கும் தொடர்பு படுத்துகிறார்கள்.

அந்த விவசாயிகள் குற்றம்செய்யவில்லை என்றால் விவசாயி தான் கூட நிற்பேன். அமலாக்கத்துறை கேட்டது என்னவென்றால் ஆதார் கார்டை வழங்குங்கள் என்று கேட்டுள்ளனர்.
இதற்கு முன்பாக இரண்டு விவசாயிகள் மீது வனத்துறை சட்டத்தில் காட்டெருமையை கொலை செய்த வழக்கு ஒன்று உள்ளது. மேலும், உங்களது வங்கிக் கணக்கை கொடுங்கள் சோதனை செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறார்கள், இது தவிர என்ன கேட்டுள்ளார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

ஆதார் அட்டையும், வங்கி கணக்கும் கொடுக்கப் போகிறார்கள். அதை அமலாக்கத்துறை சோதனை செய்ய போகிறது. அதற்கு மேல் குற்றம் செய்யவில்லை என்றால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து எடுத்தால் நானே களத்திற்கு வந்து முதல் ஆளாக அவரது விவசாய நிலத்தில் தர்ணா போராட்டத்தின் அமர்வேன், என்று கூறினார். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், ஒருகட்சி நேரடியாக சென்று செயல்படுகிறது.

இது மட்டுமில்லாமல் சேலம் இலக்கிய அணி கிழக்கு மாவட்ட செயலாளரை நான் நேரில் பார்த்ததே கிடையாது. நான் அவரை புகைப்படத்தில்தான் பார்த்தேன். சேலம் மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட செயலாளர்களில் அவர் ஒருவர் என்றும் தெரிவித்தார்.

தமிழக காவல்துறை வழக்குபதிவு செய்யும் பதிவேட்டில் ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். வடமாநிலத்தில் எங்கு பார்த்தாலும் ஜாதி பேரை குறிப்பிட்டு தான் அறிக்கை குறிப்பிடுவார்கள். அதன் அடிப்படையிலேயே தான் கொடுத்திருப்பார் தவிர வேறு எந்த காரணமும் இருக்காது. இதனை அமலாக்கத்துறை வருங்காலங்களில் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவில் குறிப்பிட்டதை அப்படியே எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். தமிழக காவல்துறையின் மூலமாக பொதுவெளியில் வரும் வழக்குப்பதிவில் ஜாதி பேரை தூக்கி விடவேண்டும். தமிழ்நாட்டின் வழக்குபதிவில் ஜாதி பெயரை ஏன் கொண்டு வருகிறீர்கள். தமிழக அரசுக்கு ஜாதி வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் கட்டாயமாக வன்கொடுமை சட்டம் வேண்டும், தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் சென்னை நிவாரணத் தொகை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கையில் பணத்தை கொடுப்பதே முறைகேடு செய்வதற்காகத்தான், அதனால் தான் ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். அடுத்து ஒரு மாதத்தில் ஆயிரம் ரூபாய் பொங்கல் தொகுப்பு என்று கொண்டு வருவார்கள். பொங்கல் தொகுப்பிற்கு நாடகம் நடத்தி பொதுமக்களிடம் பணத்தைக் கொடுப்பார்கள். ஒரு பட்டனை அழுத்தினால் உடனடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். ஆனால் இவர்கள் வங்கி கணக்கில் தரமாட்டார்கள், என்றும் பேசினார்.

பொங்கல் தொகுப்பில் பணம் வருவது உறுதி எதிர்க்கட்சியாக ஸ்டாலின் இருந்தபோது, 5000 கொடுக்க வேண்டும் என்று கேளுங்கள் என்றும் கூறினார்.

திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்கள். திருச்சி மாநகரத்தை சுத்தம் செய்வதாக கேள்விப்பட்டேன், எவ்வளவு டன் குப்பை எடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு ஏழு டன் குப்பை எடுத்ததாக கூறியதாக தெரிவித்தார்.

தமிழகம் பிரதமர் வரும் போதெல்லாம், கட்சிக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூய்மை பாரத் திட்டத்தை செயல்படுத்துவோம். தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் அரசியல் பேசமாட்டார். குறிப்பாக மக்கள் சுகாதாரமாக உள்ளார்களா? குப்பைகள் எல்லாம் எடுத்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார். வேறு எதுவும் பேசவில்லை என்றும் பேசினார்.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 453

    0

    0