டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2024, 10:00 pm

டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு!!!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கி நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றடைந்துள்ளார்.டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் உதயநிதியை வரவேற்றனர்.

உதயநிதி ஸ்டாலினுடன், விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின், நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

  • Baby John box office performanceசும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!
  • Views: - 575

    0

    0