ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிப்பு.. சாதிப் பெயர் இருக்கக்கூடாது.. புதிய விதிகள் வெளியானது!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 4:43 pm

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிப்பு.. சாதிப் பெயர் இருக்கக்கூடாது.. புதிய விதிகள் வெளியானது!!!

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வருடந்தோறும் தைத் திங்களில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு பாலமேடு அருகே கட்டப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் என சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் இந்த வருடமும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர ஜல்லிக்கட்டு போட்டிகள் அந்தந்த வாடிவாசல் பகுதிகளிலயே நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா போட்டிகள் நடைபெறும் இடத்தை குறிப்பிட்டு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்

அதன்படி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் 15-ஆம் (திங்கட்கிழமை) தேதியும், பாலமேடு பேரூராட்சியில் மஞ்சமலை ஆறு திடலில் 16-ஆம் (செவ்வாய் கிழமை) தேதியும் மற்றும்
அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டைமுனி வாசல் மந்தை திடலில் 17 ஆம் (புதன் கிழமை) தேதியும் நடைபெறவுள்ளது.

மேலும் வருடந்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே இந்த வருடமும் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்மந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

மதுரை கீழக்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்ற சமூக இடைத்தளங்களில் வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் பாலமேடு அவனியாபுரம் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகளையும் ஏற்கனவே நடைபெற்ற பகுதியிலே நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

  • goundamani shout actors in shooting spot ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…
  • Close menu