ஒரு ஹீரோயின் தனியா இருந்தாலே.. 2-ம் திருமணம் குறித்து பேசிய மீனா..!

Author: Vignesh
5 January 2024, 3:17 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

meena - updatenews360 3

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனாவிடம் இரண்டாம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த, மீனா கணவர் இறந்து ஒன்றை ஆண்டுகள் ஆகும் நிலையில், அவரது மறைவு என்னால் ஈடு செய்ய முடியவில்லை. ஒரு ஹீரோயின் தனியாய் இருந்தாலே பல வதந்திகள் தொடர்ந்து வரும் அந்த மாதிரியான வதந்திகள் என்னையும், குடும்பத்தையும் மிகவும் பாதித்து வருகிறது. தற்போது, வரை மறுமணம் குறித்து யோசிக்கவில்லை. எனக்கு மகள் இருக்கும் சூழ்நிலையில், மறுமணம் என்பது அவரையும் சார்ந்தது தான் என்று மீனா தெரிவித்துள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…