உன்கூடலாம் நடிக்கணும்னு என் தலையெழுத்து… கீர்த்தி சுரேஷால் வெறுப்பான விஜய்!

Author: Rajesh
5 January 2024, 4:57 pm

அழகு நடிகையாக, ஹோம்லி பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மகாநடி படத்தின் இவரின் நடிப்பு எல்லோரையும் பிரம்மிக்க வைத்தது. அப்டத்திற்காக தேசிய விருது வாங்கி தென்னிந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்தார்.

keerthy suresh - updatenews360

தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் பிளாப் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் இழந்தார். இதனிடையே விஜய் , அனிருத், குடும்ப நண்பர் என அவ்வப்போது யாருடனாவது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதனிடையே பாலிவுட் வாய்ப்பிற்காக தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகிவிட்டார். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் ரொம்பவே விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் சர்க்கார், பைரவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்போது விஜய் ஷூட்டிங்கில் கீர்த்தி சுரேஷை கலாய்த்து பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது கீர்த்தி சுரேஷ் நீங்க தீபிகா படுகோனிடம் நடிக்க வேண்டிய ஆள் என கூற என்ன பண்றது என் தலையெழுத்து உன் கூடலாம் நடிக்க வேண்டியிருக்கு என கலாய்த்தாராம் விஜய். இந்த விஷயம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்