வார இறுதியில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… குஷியில் நகை பிரியர்கள்…!!

Author: Babu Lakshmanan
6 January 2024, 11:24 am

வார இறுதியில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… குஷியில் நகை பிரியர்கள்…!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை நேற்று ரூ.160 குறைந்த நிலையில், இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலைகிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,792க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.38,336க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.78.00க்கும் ஒரு கிலோ ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி