நடுக்கடலில் கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தல்… அதிரடி காட்டிய இந்திய கடற்படை ; 15 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு ; வெளியான வீடியோ!!
Author: Babu Lakshmanan6 January 2024, 11:46 am
ஆப்ரிக்கா நாடான சோமாலியாவின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டு சரக்கு கப்பலை சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்தினர். இந்த வணிகக்கப்பலில் 15 இந்தியர்கள் பயணித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த இந்திய கடற்படையினர், உடனடியாக கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலையும், அதில் இருந்தவர்களையும் மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சென்னை கப்பல் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை நெருங்கியதுடன், ஹெலிகாப்டர் மூலம் கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்த இந்திய கடற்படை கமாண்டோக்கள், 15 இந்தியர்கள் மற்றும் 6 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.