எங்க போனாலும் பாதுகாப்பே இல்ல… உங்க அக்கா தங்கச்சியை இப்படி பண்ணுவீங்களா?
Author: Rajesh6 January 2024, 6:52 pm
லட்சணமான முக ஜாடையுன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய நாட்களிலேயே பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் தமிழ் கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆனால், அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் பிரியங்கா மோகன் அடையாளம் இல்லாமல் இருந்தார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
அப்படத்தை தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகவுள்ளது. அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய பிரியங்கா மோகன்,
அப்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிய அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார். ஆம், சினிமா துறையில் மட்டும் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை இல்லை. எல்லாத்துறையிலும் பெண்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்து நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. எங்கே போனாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
உங்களுடன் வேலை செய்யும் பெண்களுக்கு சம உரிமை கொடுங்கள், அவர்களை பாதுகாப்பாக நடத்துங்கள். உங்கள் அம்மா, அக்கா , தங்கச்சியை இப்படியெல்லாம் நடத்துவீர்களா? அடுத்த பெண்கள் என்றால் மட்டும் அவர்களுக்கான முக்கியத்துவத்தை கொடுக்க மறுக்கிறீர்கள். இது நல்லதல்ல என மனதில் பட்டத்தை கோபத்தோடு வெளிப்படுத்தினார்.