அயோத்தி ராமர் கோவிலுக்கு போக தமிழக பக்தர்களுக்கு உதவி தேவையா? அமைச்சர் சேகர்பாபு சொன்ன முக்கிய தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2024, 6:57 pm
அயோத்தி ராமர் கோவிலுக்கு போக தமிழக பக்தர்களுக்கு உதவி தேவையா? அமைச்சர் சேகர்பாபு சொன்ன முக்கிய தகவல்!
இன்று சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடம், அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்து தருமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பக்தர்கள் யாரும் கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை. அப்படி கோரிக்கைகள் வரும் பட்சத்தில் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று ராமர் கோயிலுக்கு செல்வதற்கு தேவையான உதவிகளை செய்ய இந்து சமய அறநிலையத் துறை தயாராக இருக்கிறது. எனத் தெரிவித்தார்.
மேலும், திராவிட மாடல் ஆட்சியில் கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 17 கோயில்களுக்கும், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 8 கோயில்களுக்கும் விரிவுப்படுத்தி உள்ளோம். மேலும், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி 20 திருக்கோயில்களில் செயல்படுத்தி வருகிறோம் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.