விமானத்தில் ஏற்பட்ட கோளாறு.. கரீபியன் தீவில் தவித்த கனடா நாட்டு பிரதமர்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2024, 11:29 am

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு.. கரீபியின் தீவில் தவித்த கனடா நாட்டு பிரதமர்!!

புத்தாண்டை கொண்டாட கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் கரீபியன் தீவுக்கூட்டத்தில் உள்ள ஜமைக்கா நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு கடந்த 2ம் தேதி ஜஸ்டின் ட்ரூடோ கனடா திரும்பவிருந்தார். ஆனால், பிரதமரின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து ட்ரூடோ கனடா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, கனடாவில் இருந்து விமானப்படையை சேர்ந்த 2 விமானங்கள் ஜமைக்கா விரைந்தன. அதில் ஒரு விமானத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர், ஜமைக்கா சென்ற விமானப்படை விமானத்தின் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தன் குடும்பத்துடன் கனடா திரும்பினார். அவர் கடந்த 4ம் தேதி கனடா வந்தடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தபோதும் கனடா பிரதமரின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் காலதாமதமாக இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1904

    0

    0