பழனி கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்… விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2024, 11:40 am

பழனி கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்… விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள்!!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில்
மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் ,ஞாயிறு விடுமுறை,தைப்பூச திருவிழா துவங்க உள்ளதால் பாதயாத்திரை பக்தர்கள் என இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

மின் இழுவை ரயில் ,ரோப் கார் நிலையம் , இலவச தரிசனம் ,சிறப்பு வழி கட்டண வரிசைகளில் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று கோயில் நிர்வாகம் சார்பில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவிலுக்கு செல்லவும் ,படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் என ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து வருகிற ஜனவரி 19ஆம் தேதி தைப்பூசம் கொடியேற்றம் துவங்கி 28 ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் வெளியூரிலிருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக பாதயாத்திரையாக அலகு குத்தி காவடி எடுத்து கிரிவலப் பாதையில் ஆடி பாடி வருகின்றனர். எனவே கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!