திருவாரூர் தாய் சேய் மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்.. கர்ப்பிணிகள் அவதி : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2024, 10:23 am

திருவாரூர் தாய் சேய் மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்.. கர்ப்பிணிகள் அவதி : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

திருவாரூரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் தண்ணீர் புகுந்தது. கர்ப்பிணி தாய்மார்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம்.

திருவாரூர் நகரத்தில் விஜயபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு தாய் – சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையால் இந்த மருத்துவமனையில் ஒரு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இங்கு சிகிச்சை பெற்று வந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பாதுகாப்பு கருதி மின்சாரமும் மருத்துவமனையில் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?