சர்ச்சையான கேள்வி…. விஜய் சேதுபதியின் பதிலை கேட்டு மெர்சலான கத்ரீனா கைப்!
Author: Rajesh8 January 2024, 11:18 am
தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.
ஆரம்பத்தில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.
இதனிடையே விஜய் சேதுபதி இந்தியில் பிரபல நட்சத்திர நடிகையான கத்ரீனா கைஃப் உடன் Merry Christmas என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த மாதம் 12ம் தேதி வெளியாகிறது. அதன் ப்ரோமோஷன்களில் படு பிசியாக இருந்து வரும் விஜய் சேதுபதி தற்போது கத்ரினா கைஃப் உடன் பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டார்.
அப்போது பத்திரிகையாளர், தமிழர்கள் ஹிந்தி தெரியாது போடா என்று சொல்கிறார்கள் . நீங்கள் மட்டும் ஏன் இந்தி படங்களில் நடித்து வருகின்றனர் என்று கேள்வி கேட்டார். அதற்கு கோபத்துடன் பதிலளித்த விஜய் சேதுபதி, எனக்கு புரியவில்லை ஏன் இந்த கேள்வியை தொடர்ந்து கேட்கிறீர்கள்? நடிகர் ஆமிர்கான் வந்தபோது கூட இந்தி தொடர்பான கேள்வியை கேட்டீர்கள். இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று தான் சொன்னார்கள். ஆனால், இந்தியே படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. எனவே இதுபோன்ற கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள் என்றார். விஜய் சேதுபதியின் இந்த பதிலை கேட்டு நடிகை கத்ரீனா கைஃப் வியப்புடன் பார்த்தார்.