கேட்டுச்சா.. அங்க தான் மவுஸ் ஜாஸ்தி.. கொடிகட்டி பறக்கும் வியாபாரம் குறித்து வரலட்சுமி சரத்குமார் பளிச்..!
Author: Vignesh8 January 2024, 12:35 pm
டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ‘சபரி’ படத்தில் இதற்கு முன்பு ஏற்றிடாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருந்தார்.

இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோக்கள், வீடியோக்கள் பதிவிட்டு வரும் இவர், தற்போது பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார் லியோ படம் குறித்து பாராட்டி பேசி இருந்தார். மேலும், ஹைதராபாத்தில் அவர் செட்டிலாகி இருக்கும் நிலையில், தனக்கு தமிழை விட தெலுங்கில் தான் அதிகம் மார்க்கெட் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.