போக்குவரத்து தொழிற்சங்கம் ஸ்டிரைக் எதிரொலி… காலதாமதமான அரசுப் பேருந்துகள்… விசாரணை அலுவலகத்தில் குவிந்த பயணிகள்!!

Author: Babu Lakshmanan
8 January 2024, 9:24 pm

போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பேருந்துகள் தாமதமானதால் கரூர் பேருந்து நிலைய விசாரணை அலுவலகத்தில் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை வழக்கத்தை விட சற்று கூடுதலாக காணப்பட்டது. தொலைதூரப் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக பொதுமக்கள் குவிந்ததால் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும், மாவட்டத்திற்குள் செல்லும் ஒரு சில பேருந்துகள் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பேருந்து நிலையத்திற்குள் வருவதற்கு தாமதமானதால், பேருந்து நிலைய விசாரணை அலுவலகம் முன்பு பயணிகள் குவிந்து அங்கிருந்த ஊழியர்களிடம் தங்கள் ஊருக்கு செல்லக்கூடிய பேருந்துகள் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 382

    0

    0